லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில சின்ன சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், அவர் வளர்க்கும் பூனை என்று பல விஷயங்கள் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானது. அதிலும் இந்த படம் வெளியாவதற்கு முனபாகவே விஜய்யின் ஷர்ட் மற்றும் விஜய் அணிந்து இருந்த காப்பு மிகப் பெரிய பிரபலமானது.
இந்த படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்திய காப்பும் இந்த படத்திற்கு ஒரு ட்ரெட் மார்க் தான். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த காப்பை நடிகர் விஜய் ஒரு டேபிள் மீது வைத்து சுழட்ட விட்டது போல இருப்பார். அதே போல படத்தில் கூட கௌரி கிஷான் ஒரு காட்சியில் இந்த காப்பை விஜய்யிடம் இருந்து வாங்கி போட்டுகொண்டு செல்வார். அதே போல சிறுவர் சீர் திருத்த பள்ளியில் பூவையர் வாங்கி போட்டச் செல்வார். அவ்வளவு ஏன் வில்லன் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய பலமான அவரது கையை விஜய் இந்த காப்பை வைத்து தான் தவிடு பொடி ஆக்குவார்.
இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய அந்த காப்பை படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜே வாங்கி கொண்டுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறுகையில், எல்லாருக்கும் ஒரு உயிரில்லா பொருள் மேல் ஒரு ஆசை இருக்கும், அப்படித்தான் எனக்கும் இந்த காப்பு மீது ஆசை இருந்தது. நேத்து நைட் தான் அவருகிட்ட சண்ட போட்டு இந்த காப்ப வாங்கிட்டு வந்தேன் இதை சொல்லத்தான் அவரிடம் இருந்து வாங்கி வந்தேன் என்று கூறியுள்ளார் லோகேஷ்.