இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து இன்று மதியத்திற்குள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கப்படும் என்று படகுழு சம்மதம் தெரிவித்தது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் மூன்றாம் நாளான நேற்று (நவம்பர் 8) தமிழகத்தில் புதிய சாதனையை செய்துள்ளது.
வெளியான முன்றே நாளில் தமிழகத்தில் மட்டும் ‘சர்கார்’ திரைப்படம் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே தமிழகத்தில் 3 நாளில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் ஹீரோ என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய்.
ஏற்கனவே வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.