தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், சினிமா உலகில் ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியுற்று இருக்கிறது. இருந்தும் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்களை இவருடைய தந்தை இயக்குனர் சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார்.
அந்த வகையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய், சிம்ரன், சிவாஜி கணேசன், மணிவண்ணன், சரோஜாதேவி, அஞ்சு அரவிந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் 100 நாட்கள் தாண்டி வெற்றி பெற்றதாக அறிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இந்த படம் தோல்வியடைந்த படம் என்றும், இதற்கு காரணம் இளையராஜா என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:
தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படம் ஒரு தோல்வியை தழுவிய படம். இதற்கு முழுக்க காரணம் இளையராஜா தான். நாங்கள் இந்த படத்தை ஒரு ஷார்ட் பிலிம் மாதிரி எடுக்க தான் நினைத்தோம். அதற்காக தான் நாங்கள் சிம்லாவிற்கு ஒரு 12 பேர் கொண்ட குழுவுடன் சென்றிருந்தோம். மேலும், ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் எழுவோம் எங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வோம்.
ஒன்ஸ்மோர் படம் தோல்வி:
என்ன தோணுதோ அதை காட்சியாக எடுத்தோம். அப்படியே சில நாட்கள் அங்கு தங்கி இருந்து எடுத்தோம். பின்பு அது நல்லபடியாக வந்தது. இதை ஒரு மணி நேரம் எடுக்கலாம் என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் காட்சிகள் எடுத்தபின் இதற்கு இசை அமைக்கலாம் என்று யோசித்து இளையராஜாவிடம் சென்றோம். அப்போது அவர் அதை பார்த்துவிட்டு இதை ஏன் நீங்கள் திரையில் வெளியிடக்கூடாது? இது அருமையாக இருக்கிறது என்று சொன்னார்.
வைரலாகும் எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ:
இப்படி அவருடைய தூண்டுதலின் படி தான் நாங்கள் இந்த படத்தை இரண்டு மணி நேரமாக ஆக்க பல காட்சிகளை புகுத்தினோம். ஆனால், அது ஒரு மணி நேரம் வந்து இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும். ஆனால், இரண்டு மணி நேரம் எடுப்பதற்காக சில காட்சிகள் வைக்கப்பட்டது தான் படம் தோல்வியை தழுவியது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர்.
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள்:
1981 ஆம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவர் கடைசியாக கேப்மாரி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. அதற்கு பிறகு வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.