அத படிங்க, புடிச்சா ஜாயின் பண்ணுங்க பிளீஸ்- தனது கட்சியின் செயலியை வெளியிட்டு விஜய் வேண்டுகோள்.

0
514
- Advertisement -

கட்சி துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் தனது கட்சியில் உறுப்பினர்கள் சேர்வதற்கு ஏதுவாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.

-விளம்பரம்-

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் :

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்:

இதை அடுத்து கடந்த மாதம் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்படும் என்றும் சில தினங்களில் அந்த செயலி செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.

-விளம்பரம்-

கட்சி கூட்டத்தில் சொன்னது:

அதுமட்டுமில்லாமல் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம், மாநகர், நகரம், சிறப்பு ஒன்றிய ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற இருக்கிறது. பின் கட்சியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் குறித்தும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், புதிய உறுப்பினர் சேர்க்க மாவட்ட சட்டமன்ற வாரியாக உறுப்பினர் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

புது செயலி குறித்த அப்டேட்:

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கட்சியின் புதிய செயலி ஒன்றை இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கிறார் நடிகர் விஜய். மேலும், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் ‘ இது என்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் உடைய உறுப்பினர் அட்டை, நான் எடுத்து விட்டேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின் தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பயணத்தில் இணைந்து, மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். அது உங்கள் எல்லாருக்கும் பிடித்திருந்தால் நீங்கள் விருப்பப்பட்டால் ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement