சின்ன கௌண்டர் 2 படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்டேன், ஆனால் – இயக்குனர் சொன்ன காரணம்.

0
11759
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் லாபம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தி உள்ளது படக்குழு. லாபம் திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குனர் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்தது. லாபம் படத்தின் வெற்றி மூலம் ஜனநாதன் ஆத்மா சாந்தி அடையும் என்று நான் நம்புகிறேன். உண்மையிலேயே விஜய்சேதுபதி தம்பி ஒரு நடிகராக இல்லை மனிதனாக வாழ்கிறார்.

- Advertisement -

தமிழ் திரையுலகில் எவ்வளவு வளர்ந்தாலும் விஜய் சேதுபதி மனிதனாக இருக்கிறார் என்று இந்த சமயத்தில் நான் சொல்கிறேன். அதுமட்டுமில்லாமல் நான் அவரிடம் ஏற்கனவே சின்ன கவுண்டர் 2 படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் இப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை என்று சொன்னார். அவருடைய கால்ஷீட்டுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஓகே என்று சொன்னால் உடனடியாக சின்ன கவுண்டர் 2 படம் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

Sense of a scene: Vijayakanth's Chinna Gounder was not meant to romanticise  caste- Cinema express

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் உதயகுமார். இவர் எஜமான், சின்ன கவுண்டர் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் தான் சின்ன கவுண்டர்.

-விளம்பரம்-
Advertisement