ரஜினி படத்தில் நடிக்க ok சொன்ன விஜய் சேதுபதி..! காரணம் என்ன தெரியுமா..! அவரே சொன்ன பதில்

0
666
Rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, இயக்குனர் ரஞ்சித் இயக்கிவரும் “காலா” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

-விளம்பரம்-

karthik-rajinikanth

- Advertisement -

சமீப காலமாக ரஜினி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால் தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் ரஜினி நடிக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தனர்.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “சூது கவ்வும் , பிசா ” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ரஜினி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

-விளம்பரம்-

vijay-sethubathi

சமீபத்தில் இந்த படத்தில் நடிப்பதை குறித்து பேசிய விஜய் சேதுபதி “ரஜினியின் நடிப்பை இதுவரை திரையில் மட்டுமே பார்த்துள்ளேன், இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் திரையுலகில் ஒரு சிலரை நம்புகிறேன் அதில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர், அவர் கூப்பிட்டால் நான் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement