விஜய், அஜித் பட்டியலில் இணைந்தார் மக்கள் செல்வன் .! பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஒப்பந்தம்.!

0
103

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித்தை விட பல படங்களை கைவரிசையில் வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் 69, சீதக்காதி, செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.

அத்தோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஸ்கெட்ச், வாலு போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை நடிகர் விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் போன்ற படங்களை இயக்கிய விஜயா வாஹன்னி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vs1

மேலும், இந்த படம் குறித்த ஆதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் அறிவித்த இயக்குனர் விஜய் சந்தர், என்னுடைய அபிமான நடிகர் விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் கைகோர்க்க இருக்கும் செய்தியை மிகவும் மகழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன், படத்தின் பணிகளை பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.