விக்ரம் படத்தில் அந்த குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுத்து நடிக்க வைத்தனர்.! எழுந்த சர்ச்சை.!

0
1057
Vikram
- Advertisement -

தமிழ் சினிமாவில் அர்பணிப்பான நடிகர்களில் நடிகர் விக்ரம் இன்னொரு கமல் என்றே கூறலாம். சமீப காலமா ஒரு தரமான ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது கமல் தயாரித்து வரும் ‘கடாரம் கொண்டான் ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

விக்ரம் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அந்நியன்’ படமும் ஒன்று. இந்த படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்று மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படியுங்க : தற்போது லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் யோகி பாபு முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து நடிக்க வைத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த படத்தின் பிளாஷ் பேக் காட்சியில் சிறு வயது அம்பியின் தங்கையாக ஒரு சிறுமி நடித்துப்பார்.

-விளம்பரம்-

அந்த சிறுமி ஒரு மின்சார விபத்தில் சிக்கி உயிரிழந்துவிடுவது போல காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், அந்த காட்சியில் அந்த சிறுமி தன்னால் நடிக்கவே முடியாது, என்னுடைய பள்ளியில் அனைவரும் தன்னை கிண்டல் செய்வார்கள் என்று கூறியுள்ளாராம். அந்த சிறுமியிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர் நடிக்க மறுத்ததால், அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் சம்மந்தப்பட்ட காட்சி ஒன்றை எடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement