தற்போது லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் யோகி பாபு முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

0
910
Yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் யோகி பாபு காட்டில் தான் அதிக மழை பெய்து வருகிறது. தற்போது மட்டும் யோகி பாபு கைவசம் 19 படங்களை வைத்துள்ளார். அதே போல யோகி பாபு தற்போது ஒரு படத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் நிர்ணயித்து உள்ளார் என்ற ஒரு செய்தி வெளியானது.

இதையும் படியுங்க : பள்ளி பருவத்தில் கராத்தே கலையில் யாஷிகா செய்த வீர சாகசம்.! செம ஆளுதான்.! 

- Advertisement -

இந்த நிலையில் யோகி பாபு நடித்து வரும் ‘தர்மபிரபு’ இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் யோகி பாபுவுடன் உடன் பல வருடங்களாக தங்கியிருந்த முத்துக்குமரன் என்பவர் பேசுகையில், யோகி பாபு டிவி நிகழ்ச்சியில் நடிக்கும் பொழுது முதல் முதலில் வாங்கிய சம்பளம் 300 ரூபாய் தான்.

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியில் யோகிபாபு நடித்துவிட்டு 300 ரூபாய் வாங்கிகொண்டு வருவார்  அதற்காக நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருப்போம் அதன் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு எல்லாம் என கூறினார். மேலும், இதை தொடர்ந்து பேசிய யோகி பாபு நான் 8 லட்சம் சம்பளம் வாங்குகிறேன் என்பதெல்லாம் பொய் என்று பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement