விக்ரம் ஒரு பக்கம் இர்பான் பதான் ஒரு பக்கம் – வெளியான கோப்ரா படத்தின் மாஸ் டீஸர்.

0
1238
cobra

தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். . நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். நடிகர் விக்ரம் அவர்கள் தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம்.

Cobra first look: Vikram essays a mastermind with seven personas in  upcoming thriller - Entertainment News , Firstpost

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : Ticket To Finaleவை வென்று இறுதி போட்டிக்கு நுழைந்த நபர் – 2 புள்ளிகளில் வாய்ப்பை தவறவிட்ட போட்டியாளர்.

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த நவராத்திரி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து இருப்பார். அதே போல 2008 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து விதமான கெட்டப்பில் தோன்றி இருப்பார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து உள்ளார் என்று கூறபடுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பாஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகிஇருந்தது. அதில் விக்ரம் ஒரு கண்ணாடி முன்பு நின்று 7 கெட்டப்புகளுடன் தோன்றி மாஸ் காட்டி இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று (ஜனவரி 9) வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement