எப்படி இருக்கிறது விக்ரமின் ‘கோப்ரா’ – முழு விமர்சனம் இதோ.

0
498
cobra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், ஆனந்தராஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி உட்பட பல நட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-
cobra

படத்தின் ஆரம்பத்தில் பல வெளிநாடுகளின் இடத்தை காட்டுகிறார்கள். அதில் ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொள்ள ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் கதாநாயகன் விக்ரம் வருகிறார். பின் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக இர்பான் பதான் வருகிறார். அந்த இளவரசர் கொலை மாதிரியே இந்தியாவில் ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும், இரண்டிலுமே ஒற்றுமை இருக்கிறது என்ற கல்லூரி மாணவி மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்கிறார்.

- Advertisement -

அதை கட்டுரையாக எழுதுகிறார். இதைப் பற்றி அறிந்த இர்பான் பதான் இந்தியா வருகிறார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை விக்ரம் செய்கிறார். விக்ரம் செய்யும் கொலைகளுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியான ரோஷன் மாத்தி இருக்கிறார். இந்த சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா? விக்ரம் அவரிடம் இருந்து தப்பித்தாரா? விக்ரம் இந்த கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.

வழக்கம் போல் விக்ரம் தன்னுடைய நடிப்பு திறமையை படத்தில் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
படத்தில் விதவிதமான தோற்றங்களின் மூலம் பல இடங்களில் விக்ரமின் நடிப்பு கைதட்டல் வாங்க வைத்திருக்கிறது. அதேசமயம் விக்ரமனின் திறமையை அஜய் ஞானமுத்து கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் நீளத்தையும் குறைத்து இருந்தால் பரபரப்பான திர்லர் படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சியிலேயே அடையாளம் தெரியாத அளவிற்கு விக்ரமின் கெட்டப் அசத்தலாக இருந்தது.

-விளம்பரம்-

ஒவ்வொரு காட்சியிலும் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு விக்ரம் மிரட்டி இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் விக்ரம்- ஆனந்த்ராஜ் கூட்டணியின் நடிப்பு திரையரங்கை அதிர வைத்திருக்கிறது.
படத்தில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்திருக்கிறார். ஆனால், கதாநாயகியை விட மீனாட்சி கோவிந்தராஜன் காட்சிகள் தான் அதிகம் இருக்கிறது.

இளம் வயது விக்ரம் காதலியாக சில காட்சிகளில் மிருணாளினி ரவி வந்து சென்றிருக்கிறார். மேலும், கிரிக்கெட் வீரர் இர்பானின் முதல் படம் என்று சொன்னால் ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு பின்னி எடுத்து இருக்கிறார். படத்தின் மேக்கிங், ஒலிப்பதிவு, இசை, சண்டை பயிற்சி எல்லாமே ஹாலிவுட் படங்களை கண் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது. படத்தில் கணிதம், அறிவியல், பலவித கெட்டப், ஆள்மாராட்டம், கார்ப்பரேட் என பல விஷயங்களை இயக்குனர் காண்பித்திருப்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆங்காங்கே சில குறைபாடுகள் தான் மற்றபடி ரசிகர்களுக்கு ஒரு கமர்சியல் படமாக இருக்கிறது.

விக்ரமின் நடிப்பு அசத்தல். மேக்கிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். சண்டை காட்சி ஹாலிவுட் படங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறது. நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். மைனஸ்: ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். இயக்குனர் கதைக்களத்தில் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம். மொத்தத்தில் கோப்ரா, சீறி பாயும் வேகம் குறைவு

Advertisement