ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியுள்ள விக்ரம். எந்த படம் தெரியுமா ?

0
3207
vikram
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் நடிகர் விக்ரம். தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கட்டங்களை கடந்து தான் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் தான்.

-விளம்பரம்-
6 Lesser known facts about Chiyaan Vikram - DGZ Media

- Advertisement -

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இவர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் சினிமாவில் பணியாற்றினார்.

அதில் அஜித், பிரபு தேவா, அப்பாஸ் என்று பல நடிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்து உள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் ஒரே படத்தில் இரண்டு நடிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்து உள்ளாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல்

-விளம்பரம்-

1997 ஆம் ஆண்டு சபாபதி தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது விஐபி படம். இந்த படத்தில் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

K TV on Twitter: "Enjoy Watching The Comedy Movie #VIP Starring ...

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் ஆனா பிரபுதேவா, அப்பாஸ் இருவருக்குமே நம்ப விக்ரம் தான் டப்பிங் பேசினாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது. நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம் . இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி கொண்டே இருப்பதால் படப்பிடிப்பு, படம் வெளியிடுதல் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Advertisement