கஜா புயல் நிவாரண நிதி..!நடிகர் சீயான் விக்ரம் கொடுக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

0
663
Vikram
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கஜா புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டி போட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

-விளம்பரம்-

மழையால் வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

- Advertisement -

பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.கஜா புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான டெல்டா பகுதி மக்களுக்கு, திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி எனப் பலரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளனர்.

சமீபத்தில் லைக்கா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடியே 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்தது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது பங்கிற்கு புயலால் பாதிக்கப்பட்டு வாடும் மக்களுக்கு தனது பங்காக 25 லட்ச ரூபாயை இன்று அளிக்கவுள்ளதாக செய்திகள் வளம் வந்துள்ளது. இதற்காக அவர் இன்று இனைய பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப உள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement