லோக்கியின் Multi Universeஆ ? – ‘விக்ரம்’ எப்படி இருக்கிறது ? முழு விமர்சனம் இதோ.

0
1302
vikram
- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்குப் பின் ரிலீசாகி இருக்கும் கமலின் விக்ரம் படத்தின் முன்னோட்டம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் இன்று வெளியாகியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமலஹாசன் படம் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரையரங்கில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் முன்னோட்டத்தை பற்றிதான் இங்கு பார்க்க போகிறோம்.

இதையும் பாருங்க : வெண்ணிலா கபடிக்குழு நடிகருக்கு இப்படி ஒரு நோயா – பெட்டிக்கடை நடத்தி காப்பாற்றி வரும் மனைவி. வீடியோ இதோ.

- Advertisement -

விக்ரம் படம் ரிலீஸ்:

இந்த படத்தைப் பொருத்தவரை போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன் மகனை கொலை செய்த கும்பலை பழிவாங்குகிறார் கமல். பின் போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க கமல் களமிறங்குகிறார். இது தான் படத்தின் ஒரு வரி கதை. இது முழுக்க முழுக்க ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். கமல் தன்னுடைய மகனை படும் சிரமங்கள் உடன், பாசத்துடன் வளர்கிறார்.

படத்தின் கதை:

ஆனால், போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். தந்தையாக களத்தில் கமல் இறங்கி துவம்சம் செய்கிறார். நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். இவருக்காக சந்தானபாரதி நரேன், டீனா உட்பட பலர் உதவுகிறார்கள். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவருக்கு சிவானி, மகேஸ்வரி, மைனா என்ற மூன்று மனைவிகள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தில் நடிகர்கள் பற்றிய தகவல்:

வெளிநாட்டுக்கு போதைப்பொருட்கள் அனுப்புவதில் கைதேர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் அறிமுக காட்சியே பயங்கர மாஸாக இருந்தது. இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அடுத்து வேற என்ன, படம் முழுக்க சண்டை காட்சிகள், ஆக்சன், துப்பாக்கி சூடு தான். ஒவ்வொரு காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு. துப்பாக்கி, பீரங்கி என்று படம் முழுக்க ஒரே சத்தம், ரத்தம் தான் இருக்கிறது.

படத்தில் உள்ள குறைபாடு:

ஆனால், படத்தின் நீளம் மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. முதல் பாதியில் கதாபாத்திரத்தை மட்டுமே விவரிக்கிறது. கமல் முதல் பாதியின் இறுதியில் தான் தோன்றுகிறார். இருப்பினும் இடைவேளை பகுதி இரண்டாம் பாதியின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. பின் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். ஆனால், படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. அனிருத்தின் இசை மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது. பின் படத்தில் சில நிமிடங்களே வரும் சூர்யா காட்சியை ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

100% லோகேஷ் படம் :

அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். பஹாத்தின் நேர்த்தியான நடிப்பு, விஜய் சேதுபதியின் அலட்டலில்லா மாஸ் தோரணை இந்த படத்தின் மற்றொரு பலம். அதே போல இந்த படத்தில் வரும் நரேன் கைதி படத்தின் தொடர்ச்சியை தாங்கி வருகிறார். இப்படி பலரின் கதாபாத்திரம் பாரட்டப்பெற இந்த படத்தில் நடித்த ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகோயோருக்கு படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை. அவர்களை ஏன் போட்டார்கள் என்றும் தெரியவில்லை.

இறுதி அலசல் :

மொத்தத்தில் இந்த பாடம் லோக்கியின் 100 % படம் என்று சொல்லலாம். கமல் இந்த படத்தில் தன்னுடைய இயக்குனர் பார்ட்டை நன்றாகவே ஒத்தி வைத்து இருக்கிறார். மேலும், ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் சொன்னதை போல இந்த படத்தில் தனது முந்தய படத்தின் பட தொடர்ச்சிகளை காண்பித்து இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. மேலும், இதுவே அடுத்தடுத்த பாகங்களுக்கு விதையாகி இருக்கிறது. கண்டிப்பாக விக்ரம் படத்தின் பாகங்களை எதிர்பார்க்கலாம். இந்த படம் கமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. மேலும், மீண்டும் தன்னை ஒரு தரமான இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார் லோக்கி.

Advertisement