தேசிய விருது பெற்ற மாஸ் நடிகருடன் ரஞ்சித்தின் அடுத்த படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

0
101
paranjith
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதையும் பாருங்க : இசைஞானி இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் விஜய் சேதுபதி படத்திற்கு தடை

- Advertisement -

இந்த பேனரில் பல படங்களை தயாரித்து அதில் சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இறுதியாக இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் யாரை வைத்து இயக்குவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் ரஞ்சித் விக்ரமுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். விக்ரமின் 61-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement