இரண்டு பக்கமும் காடு, ஒரே இருட்டு. நான் வண்டி பின்னாடி கத்திக்கிட்டே ஓடினேன் – மன்மத ராசா பாடகிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.

0
43368
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகி மாலதி லட்சுமணன். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தில் மன்மத ராசா என்ற பாடலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, இப்போது நான் தனியாகவே நிறைய பயணங்கள் செய்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்னாடி இந்த மாதிரி இவ்வளவு தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு இல்லை. நான் லக்ஷ்மணன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆன புதிதில் நான் ஹவுஸ் ஒயிஃப் ஆக தான் வீட்டில் இருந்தேன். கச்சேரிகளுக்கு போகும் போது நான் என் கணவர் கூட தான் போயிட்டு வருவேன். அதனால் எனக்கு பெரிய சிரமம் கஷ்டமும் தெரியாது. சினிமாவில் பாட ஆரம்பித்ததும் நான் தனியாக கச்சேரிகளுக்கு போகத் தொடங்கினேன். வெளியூர், வெளி நாடுகள் வரை எல்லா இடத்துக்கும் தனியாக போய் வர ஆரம்பித்தேன்.

-விளம்பரம்-
Malathy Laxman

- Advertisement -

அந்த சமயத்தில் தான் நான் சுயமாக முடிவெடுக்க தொடங்கினேன். அப்போது எனக்கு துணையாக இருந்தது பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை தான். 12 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை நான் திருநெல்வேலிப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கச்சேரிக்கு சென்று இருந்தேன். கச்சேரியை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு மேல் நான் சென்னைக்கு புறப்பட்டேன். அந்த வழி காட்டு பாதை வழி. நெடு தூரம் பயணம் என்பதால் நான் என் பேமிலி டிரைவருடன், இன்னொரு ட்ரைவரை அழைத்து வந்து இருந்தேன். பின் நான் காரில் சென்னைக்கு கிளம்பிட்டேன். டிரைவர் வண்டியை ஓட்ட நான் பின் சீட்டில் படுத்து தூங்கிட்டேன். மதுரை நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது ஒரு இடத்தில் டிரைவர் இறங்கி வண்டியை மாத்தி வேற ட்ரைவர் ஓட்டினார். அப்ப நான் ரெஸ்ட் ரூம் போகலாம்னு அவசரமாக வண்டியை விட்டு கீழே இறங்கினேன்.

நான் இறங்கியதை எந்த டிரைவரும் கவனிக்கவில்லை. ட்ரைவர் கதவை மூடியதும், நான் இறங்கி கார் கதவை மூடின சவுண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் அவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை. அதனால் காரை எடுத்து போய் விட்டார்கள். நான் இறங்கி நின்ற இடம் இரண்டு பக்கமும் காடு, ஒரே இருட்டு. நான் வண்டி பின்னாடி கத்திக்கிட்டே ஓடினேன். ஆனால், நான் கத்தியது டிரைவர்கள் காதில் கேட்கவில்லை. சீக்கிரமாக சென்னை போக வேண்டும் என்ற காரணத்தினால் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றார்கள். ஓடி ஓடிப் போயி ஒரு கட்டத்தில் நான் அசந்து போய் நின்றுவிட்டேன். நடுராத்திரியில் நடுரோட்டில் நின்று இருந்தேன். இப்ப கூட நினைத்து பார்த்தால் பயமாக இருக்கிறது. பயம் ஒரு பக்கம்,என்ன பண்றது எனக்கு தெரியவில்லை. என் கையில் காசும் இல்லை, போனும் இல்லை.

-விளம்பரம்-

அந்த நேரத்தில் தான் லாரி ஒன்று அங்கு வந்தது. நான் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த லாரியை கைகாட்டி நிறுத்தினேன். அந்த கிளீனர் பையனிடம் எனக்கு நடந்த சூழ்நிலையைச் சொல்லி என்னைக் கொண்டு போய் விட முடியுமா? என்று கேட்டேன். அந்த பையனும் சரிங்க மேடம் பயப்படாதீங்க அடுத்த ஒரு ஊரில் போன் பண்ணலாம்னு சொன்னார். அந்த சமயத்தில் எனக்கு என்ன வேண்டும் என்றாலும் நடந்து இருக்கலாம். ஆனால், நான் என்னுடைய தைரியத்தையும், நம்பிக்கையும், பொறுமையும் கைவிடவில்லை. லாரியில் ஏறி நான் பயணித்தேன். 4 ரோடு இணையும் ஒரு ஜங்க்ஷன் வந்தது. அங்கிருந்த கடையில் இருந்து என் நம்பருக்கு போன் செய்தேன்.

அப்போது தான் என்னுடைய டிரைவருக்கு நான் காரில் இல்லாதது தெரிந்தது. பின் என் கார் ட்ரைவர் வந்ததும் லாரி ஓட்டுனர்களுக்கு பணத்தை கொடுத்து கண்கலங்க நான் நன்றி சொன்னேன். எனக்கு கடவுள் மாதிரி அவர்கள் அந்த நேரத்தில் உதவி செய்தார்கள். வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கை எப்போதும் கைவிடக் கூடாது. அது தான் துணையாக இருக்கும் என்று கூறினார்.

Advertisement