விக்ரம் வீட்டில் இருந்து மற்றும் ஒரு நடிகர்.! ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை.! யார் தெரியுமா ?

0
11324
Vikram-son

தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இவருடைய இயற்பெயர் கென்னடி ஆகும்.ஆனால், சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு விக்ரம் என்று மாற்றிக்கொண்டார். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் கால் தடம் பதித்துள்ளார்.மேலும், தமிழ் சினிமா துறையிலேயே ஒரு கதை மற்றும் கேரக்டருக்காக தன் உடம்பை வருத்திக் கொள்ளும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ,விஜய் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சர்வதேச தமிழ்பட விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

Image result for vikram daughter

மேலும், கௌரவ டாக்டர் பட்டத்தையும் கூட வாங்கியுள்ளார். இவர் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். மக்களின் நலனுக்காக பல சமூக நலத் தொண்டு களையும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார். மேலும் அவர் ‘சஞ்சீவனி’ டிரஸ்ட்,’ வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். நடிகர் விக்ரம் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை குருவாயூரில் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா.! இறுதியாக தனது புகைப்படத்தை அனுப்பிய பிக் பாஸ்.!

- Advertisement -

மேலும், இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும் த்ருவ் என்ற மகனும் உள்ளனர். அதனைத்தொடர்ந்து, இவருடைய மகன் துருவ் விக்ரம் என்பவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருக்கிறார். இவர் ஆதித்யா வர்மா எனும் படத்தில் நடித்து உள்ளார் என்றும், இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்த ‘ஆதித்யா வர்மா’ என்ற படம் தெலுங்கில்நடத்த அர்ஜுன் ரெட்டி அவர்களின் படம் என்றும் அது தமிழில் ரீமேக் செய்யப்பட்டது என்று கூறினார்கள்.சில வருடங்களுக்கு முன்னால் நடிகர் விக்ரம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

vikram-relative

இந்த நிலையில் தற்போது சியான் விக்ரம் அவர்களின் குடும்பத்திலிருந்து இன்னொரு வரும் சினிமா துறைக்கு வர போகிறார் என்ற தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அது விக்ரமின் மருமகன் தற்போது சினிமா துறையில் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரின் படத்திற்கான பூஜைகளும் சில வாரங்களுக்கு முன்னால் நடைபெற்றது என்றும், இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை என்றும் தெரிவித்தார்கள். இந்தப் படத்தினுடைய கதாநாயகியாக பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா அவர்கள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும், இப்படத்தை பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement