வீர தீர சூரன் 2 படம் பற்றி நடிகர் விக்ரம் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் HR Pictures தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் வெளியாக பல பிரச்சனைகள் நடந்தது. பின் இந்த படத்தின் ரிலீஸ்க்கு திடீரென்று தடை விதிக்கப்பட்டது. பின் அந்த பிரச்சனையை ஒரு வழியாக முடித்து கடந்த வாரம் தான் வீர தீர சூரன் 2 படம் வெளியிடப்பட்டது. லேட்டாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு படமும் நல்ல வசூல் செய்து வருகிறது.
வீர தீர சூரன் 2 :
இனி வரும் நாள்களில் மிக பெரிய வசூல் சாதனை வீர தீர சூரன் 2 செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக நடிகர் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரே ஒரு வாழ்க்கை. அதை நல்லா வாழ்ந்துடனும் என்ற இந்த டயலாக்கை சொல்லியிருப்பேன். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கே யப்பா, எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இப்போது கூட வீர தீர சூரன் படம் ரிலீசுக்கு நிறைய பிரச்சனை வந்தது.
#ChiyaanVikram reminisces the journey of #VeeraDheeraSooran and extends heartfelt thanks to the audiences for the love shown towards the blockbuster ❤️🔥@chiyaan @sooriaruna @proyuvraaj @Kalaiazhagan15 @mugeshsharmaa pic.twitter.com/Ia1ILXGiXK
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) April 4, 2025
விக்ரம் வீடியோ:
ரிலீஸ் ஆகுவதற்கு முன்னாடி படம் பார்த்தவர்கள் எல்லோருமே படம் சூப்பராக இருக்கிறது, வித்தியாசமான கதை, பயங்கரமான ஆக்சன் படம், பெரிய மெகா ஹிட்,இந்த வருஷத்தோட மிகப்பெரிய படம் இதுதான் என்றும் நிறைய பேர் பாராட்டி இருந்தார்கள். ஆனால், திடீரென்று உயர்நீதிமன்றம் படம் நான்கு வாரத்துக்கு ரிலீஸ் ஆக தடை விதித்தது. இருந்தாலும் அந்த பிரச்சினைகள் எல்லாம் சமாளித்து முதல் இரண்டு ஷோ ரிலீஸ் ஆகாமல் மாலையில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் ஷோ ரிலீஸ் ஆகாமல் போனால் அந்த படம் முடிந்தது, அவ்வளவுதான் என்று சொல்வார்கள்.

படம் பற்றி சொன்னது:
ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், மாலையில் ரிலீஸ் ஆனதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து படத்தை பார்த்திருந்தார்கள். ரசிகர்கள், குடும்பங்கள் என எல்லோருக்குமே பாராட்டினார்கள். படத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இப்போ படம் வெற்றியை நோக்கி நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இது உங்களுக்காக பண்ணிய படம். படத்தை பார்த்து எல்லோருக்குமே நன்றி. பார்க்காதவர்கள் நிச்சயமாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று நெகிழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார். விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.






