விக்ரம், விஜய் சேதுபதி ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த இரண்டு நடிகர்கள் தானாம். (செட் ஆகி இருக்கும்னு நினைக்கிறீங்க ? )

0
1426
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
vikram

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அடேய், விஜய் டிவி 😡😡😡 எப்ப பாரு இப்படி மட்டும் தான் ஷோ பண்ணுவயா Non Sense – காண்டாகி காஜல் போட்ட பதிவு.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறியிருந்தார்.

கமல் குறித்த தகவல்:

அதோடு விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு பின்னர் தமிழில் மிக தரமான படைப்பு வந்திருப்பது குறித்து கோலிவுட் கொண்டாடி வருகிறது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி நடித்த ரோல்:

விக்ரம் படத்தில் கமலஹாசன், பகத் பாசிலுக்கு சவால் கொடுக்கும் அளவிற்கு சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பார். அவருடைய ஆரம்ப காட்சி முதல், இறுதிக் காட்சிவரை பயங்கரமான வில்லத்தனமும், நக்கலான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாடி லாங்குவேஜில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து இருப்பதை பார்க்க முடிகிறது.

சந்தானம் ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள்:

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடிக்க இருந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் முதலில் பிரபுதேவா அல்லது லாரன்சை தான் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். பின்னர் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வந்தார். சந்தானம் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் மாஸ் என்றெல்லாம் நெட்டிசன்கள் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement