தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை விஜய் டிவி தான் ரியாலிடி நிகழ்ச்சிகளின் ராஜாவாக திகழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கண்டு காண்டாகி இருக்கிறார் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.
காஜல் நடித்த படங்கள் :
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.
விஜய் டிவி ஷோ குறித்து காஜல் :
சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம் என்று கூறி இருந்தார். சமீப காலமாக காஜலை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமீபத்தில் தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘அடேய், விஜய் டிவி, எப்ப பாரு இப்படி மட்டும் தான் ஷோ பண்ணுவயா. மரியாதையா அடுத்த முற பிக் பாஸ் முரட்டு சிங்கிள்னு ஒரு ஷோ பண்ணு மேன் என்று குறிப்பிட்டு BiggBossJodiயையும் குறிப்பிட்டுள்ளார்.
காஜலின் வருத்தமான பதிவு :
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க முடியவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் தெரிவித்து இருக்கிறார் காஜல். இந்த படத்தில் ஷிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி என்று மூன்று சின்னத்திரை நடிகைகள் நடித்துள்ளனர்.இந்த படத்தில் இவர்கள் மூவரும் கமிட் ஆகி இருக்கின்றனர் என்று அறிவிப்பு வெளியான போதே கமலுக்கு ஒரு ஜோடி, விஜய் சேதுபதிக்கு ஒரு ஜோடி, பகத் பாசிலுக்கு ஒரு ஜோடி என்று தான் பலரும் எதிர்பார்த்தனர்.
விக்ரம் படம் குறித்து காஜல் :
ஆனால், இந்த படத்தில் இவர்கள் மூவரும் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளாக நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் இவர்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிக்க முடியவில்லயே என்று பிரபல நடிகை காஜல் பசுபதி பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘சீரியல் ஆர்ட்டிஸ்ட் மூன்று பெரும் கமல் சார் படத்துல, விஜய் சேதுபதி ஜோடியா. சூப்பர் ஜி, எதுக்கு நாங்களும் சீரியல பண்ணி இருக்காமல் போல என்று பதிவிட்டுள்ளார்.