‘போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு நன்றி கூட சொல்லமாடீங்கா’ – கடுப்பான தயாரிப்பாளர், கோப்ரா இயக்குனர் விளக்கம்.

0
496
cobra
- Advertisement -

கோப்ரா படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் டி சிவா பதிவிட்டு இருக்கும் டீவ்ட்க்கு இயக்குனர் அஜய் கொடுத்த பதில் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். நடிகர் விக்ரம் அவர்கள் தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், நவராத்திரி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து இருப்பார்.

- Advertisement -

கோப்ரா படத்தில் விக்ரம் கெட்டப்:

அதே போல 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து விதமான கெட்டப்பில் தோன்றி இருப்பார். தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து உள்ளார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

அஜய் ஞானமுத்து பதிவிட்ட பதிவு:

இந்த படத்துக்கு திட்டமிட்ட பொருட் செலவை விட பல மடங்கு செலவுகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து தாண்டி விட்டார் என்ற தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பதிவில் பெரும் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றியைத் தெரிவிக்கவில்லை என்று சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பலரும் பல விதமான கமெண்ட் போட்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

விமர்சித்த தயாரிப்பாளர் டி. சிவா:

அதிலும் சிலர் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்த தயாரிப்பாளருக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவிக்காதது பெரும் தவறு என்று கொலை குற்றவாளி போல் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் டி. சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, போட்ட பட்ஜெட்டை விட பலமடங்கு செலவை இழுத்து விட்டும் அதை தாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குனரை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.

பதிலடி கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து:

இதை பார்த்த இயக்குனர் அஜய் ஞானமுத்து தயாரிப்பாளர் சிவாவின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், அதற்கு காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக சத்தமாக பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்து தான். நான் என்றும் அவரை கைவிடவில்லை என்று பதில் பதிவு போட்டிருக்கிறார். இப்படி அஜய் ஞானமுத்து பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement