மரியாதை ரொம்ப முக்கியம் , நான் அங்கே வரமாட்டேன் ! விக்ராந்த் அதிரடி முடிவு ?

0
3993
vikranth

இளைய தளபதி விஜயின் தம்பி முறையானவர் நடிகர் விக்ராந்த். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாட்களில் விஜயைப் போலவே இருக்கிறார் இவர் தான் விஜய்க்கு போட்டி என்றெல்லாம் பல பேச்சுக்கள் வந்தது. ஆனால் அப்படி ஏதும் அவர் ஜொலித்துவிடவில்லை. அவருக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க தற்போது வரை போராடி வருகிறார் விக்ராந்த்.
Actor Vikranthஒவ்வொரு வருடமும் இந்திய சினிமாவில் உள்ள பல்வேறு மொழி திரையுலகின் நடிகர்களுக்கு CCL என செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடக்கும். இதில் கோலிவுட்டின் சென்னை ரைனோஸ் அணியின் மிக முக்கியமான வீரர் விக்ராந்த். சொல்லப்போனால் சினிமாவை விட இவருக்கு இந்த கிரிக்கெட்டின் மூலம்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், இந்த வருட கிரிக்கெட் லீக்கில் இவரும் இவருடைய நண்பர் விஷ்ணு விஷாலும் கலந்து கொள்ளபோவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த லீக்கில் விளையாடியதால் தங்களுக்கு பெரிய மதிப்பிழப்பு மற்றும் அவமானம் நேர்ந்தது போல தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்ராந்த்.

‘இந்த வருடம் நான் CCL போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஒரு சில நேரத்தில் வாழ்க்கையில் சுயமரியாதை மிகவும் முக்கியம். சென்னை ரைனோஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது’என தங்களுக்கு அவமரியாதை நடந்தது போல பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.