‘உங்களுக்கு பிரச்சனை நிறைய வரும்னு அட்வைஸ் பண்ணாரு’ – விக்ரம் பட வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து Village Cooking சேனல் வெளியிட்ட வீடியோ.

0
318
villagecooking
- Advertisement -

யூடுயூபில் எத்தனையோ சமையல் சேனல் இருந்தாலும் லுங்கி, தலப்பா கட்க்கொண்டு கிராமத்தில் உள்ள அழகான லொகேஷனில் சமைத்து, சமைத்து முடித்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் அருகில் உள்ள ஆதாரவற்ற ஆசிரமங்களுக்கு பரிமாறி நம் மனதையும் நிறைய வைத்த village cooking chennal தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறது. இன்னிக்கி ஒரு புடி, always welcomes you என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள், இந்த village cooking டீம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-12.png

ஒரு தேசிய கட்சித் தலைவர் தமிழ் யூடுயூப் சேனலை விசிட் அடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராகுல் காந்தி வந்து சென்ற வரை 70 மில்லியன் பாலோவர்கள் இருந்த நிலையில் தற்போது 5 மாதத்தில் 30 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் உயர்ந்து 10 மில்லியன் சப்ஸ்ரைபர்களை பெற்று இருக்கிறது இந்த சேனல். 10 மில்லியன் என்றால் 1 கோடி பேர் என்ற இமாலய பாலோவர்ஸ். தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல்.

இதையும் பாருங்க : முதன் முதலாக வெளிவந்த லோகேஷ் கனகராஜின் குடும்ப புகைப்படம் – இது தான் லோகேஷ்ஷின் ரியல் யுனிவர்ஸ்.

- Advertisement -

மிகப்பெரிய தமிழ் யூடுயூபர்ஸ்:

அதுவும் ஒரு தமிழ் யூடுயூப் சேனல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது இந்த டீம். லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், எந்த வகையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கின்றனர் அந்த இளைஞர்கள். இந்நிலையில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.விக்ரம் படத்திலும் சமையல் செய்யும் காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினர் இடம்பெற்றனர். இந்த காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

விக்ரம் படத்தின் பிரியாணி சீன் :

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவரின் Trademark இருக்கும். அதில் குறிப்பாக பிரியாணி கண்டிப்பாக இடம்பெற்று விடும். அந்த வகையில் விக்ரம் படத்தின் ட்ரைலரில் கூட பிரியாணி இடம்பெற்று இருந்தது. இந்த பிரியாணியை village cooking team தான் செய்தார்கள் என்று படம் வெளியாவதற்கு முன்பாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால், விக்ரம் படத்தின் அனலான இண்டர்வல் பகுதியில் இந்த மொத்த டீமும் இடம்பெற்று இருந்தனர்.

-விளம்பரம்-

நன்றி தெரிவித்து Village Cooking Team வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தில் நடித்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள Village Cooking டீம் ‘எங்கள் சீன் வரும்போது மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கும் கமல் சார்கும் ராஜ் கமல் பிலிம்ஸ்கும் மிக்க நன்றி. எங்களை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்த லோகேஷ்க்கு நன்றி’

விஜய் சேதுபதி கொடுத்த அட்வைஸ் :

மேலும், விஜய் சேதுபதி அண்ணன் ‘விக்ரம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்கள் வீடியோவில் இந்த விஷயம் எல்லாம் நன்றாக இருக்கிறது இதையெல்லாம் இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணி இருக்கலாம் என்று வீடியோவிற்கு மட்டும் அல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் நீங்கள் உயர உயர உங்களுக்கு பிரச்சனைகளும் வரும் அதையெல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்று ஒரு கூட பிறந்த அண்ணனா அவ்வளவு அட்வைஸ் செய்தார் செய்து அண்ணன். அவர்களுக்கு மிக்க நன்றி’ என்றும் கூறியுள்ளனர்.

Advertisement