ஒரே ஒரு லுக், சிம்புவின் பட்டமளிப்பு விழாவில் ஓவர் நைட்டில் பேமஸ் ஆன இவங்க யார் தெரியுமா ?

0
434
Simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகிலேயே அதிக சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் சிம்பு தான். அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார். சினிமா முதல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என பல பிரச்சனைகளில் சிம்பு மாட்டி இருக்கிறார். இதனால் இவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருந்தார். இதுகுறித்து கூட இவர் பல மேடைகளில் பேசி இருந்தார். சமீபத்தில் மாநாடு பட விழாவின்போது கூட சிம்பு மனஅழுத்தத்தினால் தான் பட்ட கஷ்டங்களை பேசியிருந்தார். எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இருந்தும் நடுவில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. பின் சின்ன இடைவேளைக்கு பிறகு சிம்பு செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினார். அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

சிம்புவின் மாநாடு படம்:

அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்:

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ஐசரி கணேஷ் வழங்கினார். டாக்டர் பட்டம் வழங்கிய பின் தந்தை டி ஆர் ராஜேந்திரன் மற்றும் தாயிடம் சிம்பு ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். எனது இந்த நிலைமைக்கு முழு காரணம் எனது தாயும், தந்தையும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான் என்று சிம்பு கூறி இருந்தார். அதற்கான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சிம்புவுடன் இருக்கும் பெண் யார்:

மேலும், இந்த பட்டம் வாங்கியதில் இருந்தே சிம்புவை எல்லாரும் டாக்டர் சிம்பு என்று தான் அழைத்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சிம்புவிற்கு பட்டம் அளிக்கும் போது பக்கத்தில் இருக்கும் பெண் குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவுடன் மேடையில் இருந்த பெண் யார் இவங்க? என்ற நெட்டிசன் எல்லாம் சோஷியல் மீடியாவில் வலை வீசி தேடி வருகிறார்கள். சிம்பு டாக்டர் பட்டம் வாங்கும் போது ஐசரி கணேஷ் கைகொடுத்து டாக்டர் பட்டம் கொடுக்கும் போது சரியாக அந்த பெண் சிம்புவை பார்க்கிறார்கள்.

வைரலாகும் சிம்புவின் வீடியோ:

அதை நெட்டிசன்கள் ஒன்றுக்கு இரண்டு முறை ரீமேக் எல்லாம் பண்ணி யார் இவங்க? என்று என்று சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தார்கள். தற்போது அதற்கான விளக்கம் கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிம்பு பட்டம் வாங்கும் போது அருகில் இருந்த பெண்ணுடைய பெயர் ப்ரீத்தா கணேஷ். இவர் வேற யாரும் இல்லைங்க வேல்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் உடைய vice-president. எதார்த்தமாக தான் அவர் சிம்புவை பார்க்கிறார்.

விளக்கம் கொடுத்த நெட்டிசன்கள்:

இதை நம்ப பயபுள்ளைங்க ரீமேக் எல்லாம் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் உலா வந்து இருந்த வீடியோவிற்கு விளக்கம் கிடைத்திருக்கும். மேலும், மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement