உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் தான் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1834 பேர் பாதிக்கப்பட்டும், 41 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.
இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என ஒருவரை கூட இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் அவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்காக இவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
தற்போது அவருக்கு 76 வயது தான் ஆகிறது. உலக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஸ்டார் வார்ஸ் படத்தில் 7 மற்றும் 8 பாகங்களில் நடித்தவர் ஆண்ட்ரூ ஜேக். இவர் ஹாலிவுட் படங்களில் நடிப்பு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக வலம் வந்த ஜோ டிப்பி ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகைகள் ஓல்கா குரிலென்கோ, இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் எல்லாம் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனவினால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸை தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான் கொரோனா பரவுவதில் இருந்து பாதுகாக்க முடியும்.