ரத்னம் பட விழாவில் Eps, Ops குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதிலால் அண்ணாமலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் Fire விட்டு வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.
அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விஷால் நடித்த படம்;
அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்துஇருந்தது. ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ரத்னம் படம் :
இதனை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்து இருக்கிறார் விஷால். இது விஷாலின் 34வது படமாகும். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஷால் – ஹரி கூட்டணி. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Epsஆ, Opsஆ ? :
அப்போது ரசிகர் ஒருவர் ‘Epsஆ, Opsஆ என்று கேள்வி எழுயிப்பினார். இதற்கு விஷால், IPSங்க என்று பதில் அளித்தார். இந்த வீடியோ கிளிப்பிங்கை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் Fire விட்டு வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவின் முழு வீடியோவில் விஷால் IPS என்று குறிப்பிட்டது தி.மு.கவை சேர்ந்த IP.செந்தில் குமார் தான் என்றும் அதனை கட் செய்து அண்ணாமலை ஆதரவளர்கள் இப்படி பரப்புகின்றனர் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அதே போல இந்த விழாவில் ரசிகர் ஒருவர் சாப்பிடும் முன் சாமி கும்புடுவது பற்றி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த விஷால் ‘ எனக்கு அல்லாவும் ஒன்றுதான் சாய்பாபாவும் ஒன்றுதான் ஜீசஸ்சும் ஒன்றுதான். நிறைய பேர் இது குறித்து என்னிடம் கேட்டார்கள் சமீபத்தில் கூட ஒரு பெண் என்னைப் போன்று செய்து காட்டினார். எனக்கு கேமரா தான் தெய்வம், அதுதான் எனக்கு சோறு போட்டது. கடவுளை நான் பார்த்தது கிடையாது, அந்த கேமரா தான் எனக்கு கடவுள் அந்த கேமரா முன்பு நான் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்று என்று சொல்வது தான் என்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார்.