அந்த கட்சிக்காரன் பாலியல் சர்ச்சையில் சிக்குனா உடனே வைரமுத்து பொட்டிய திறந்துடுவீங்களே – சின்மயி பதிவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
199
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

- Advertisement -

மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு சுதந்திரம் கருத்து தெரிவித்து வருகிறார்.அதே போல இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் வைரமுத்துவை பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் குஷ்பூ, தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘ உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்தவிதமான துஷ்பிரயோகத்திலிருந்தும், குறிப்பாக போதைப்பொருள் பாவனையிலிருந்தும் காப்பாற்ற போராடும் போது, ​​தமிழகத்தில் உங்களுக்கு ஒரு முதல்வர், அவர் தனது சொந்த மனிதரான ஜாஃபர் சாதிக்கின் மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரத்தைப் பற்றி அமைதியாக இருக்கத் தேர்ந்தெடுக்கிறார்.

-விளம்பரம்-

இந்த போதைப்பொருள் கடத்தல்காரன் பணத்தை தனது சாம்ராஜ்யத்தை உருவாக்க & திரைப்படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், கட்சிக்கு ஒரு பங்கையும் கொடுக்கிறார். இன்று தன் குழந்தை போதைக்கு அடிமையானதை பார்க்கும் ஒவ்வொரு தாயின் கோபத்தில் திமுக நிற்கிறது. இந்த கோபம் கேட்காமல் போகாது. அறிவாலயம் ஒவ்வொரு பெற்றோரின் அழுகைக்கும் வலிக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு தி.மு.கவின் சரவணன் அண்ணாதுரை ‘ பாலியல் கொள்ளையர்களிடமிருந்து, குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடும் போது, ​​​​தனது சொந்த மனிதனான பிரிஜ் பூஷன் சிங்கின் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அமைதியாக இருக்கும் ஒரு பிரதமர் நமக்கு இருக்கிறார். பெண்களைப் புகழ்ந்து பேசும் ஒவ்வொரு மனிதனின் கோபத்துக்கு ஆளாகி நிற்கிறது பாஜக. இந்த கோபம் கேட்காமல் போகாது. BJP4இந்தியா ஒவ்வொரு இந்தியனின் அழுகைக்கும் வலிக்கும் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

இவரின் இந்த பதிவிற்கு சம்மந்தமே இல்லாமல் ஆஜரான சின்மயி ‘ உங்கல் மோலெஸ்டெரை கட்டுபாடுங்கல்ல்ல் Pleeeeeaase saaaar pleaaaase saaar எங்கல் பாதுகாப்பு க்கும் குறள் கொடுங்கள் பலா பல பெண்களின் கையில் பலியாக மாறுகிறார். மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கல், பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மிரட்டுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலர் ‘பா.ஜ.க காரன் சிக்குனா வைரமுத்து விவகாரத்தை தூக்கிட்டு வந்துடுறீங்க என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement