அவன் அம்மாவுக்கு பெரிய புள்ளய ஹீரோ ஆக்கணும்னு தான் ஆசை, ஆனா அவன் நடிச்ச முதல் படமே – விஷால் தந்தை

0
185
- Advertisement -

சண்டக்கோழி படம் குறித்து விஷால் தந்தை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் சண்டக்கோழி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தில் விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், லால், சுமன் ஷெட்டி, கருப்புசாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்நிலையில் சண்டக்கோழி படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக விஷாலின் அப்பாவும் சண்டக்கோழி படத்தின் தயாரிப்பாளருமான ஜி கே ரெட்டி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு சினிமாவில் சாதிக்கணும் என்ற ஆசையும், பிடிவாதமும் திமிரும் நிறைய இருந்தது. பிசினஸ் செய்து கொண்டிருக்கும் போதே படம் தயாரிக்க ஆரம்பித்தேன்.

- Advertisement -

ஜி கே ரெட்டி பேட்டி:

எல்லா மொழியிலும் சினிமா துறையின் நட்பு வட்டம் எனக்கு அதிகமானது. என் மூத்த மகன் விக்கி 12ஆம் வகுப்பு, விஷால் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்குமே அப்போது சினிமாவில் ஆர்வம் கிடையாது. ஆனாலும், இரண்டு பேரில் யாரையாவது ஒருத்தர் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவங்க அம்மாவுக்கும் விக்கியை ஹீரோவாக்க ஆசை இருந்தது. அந்த படம்தான் பூப்பறிக்க வருகிறோம். அதற்கு அடுத்த இரண்டாவது படம் பெரிதாக ஓடவில்லை. அதனால் என் மனைவி உங்க பணத்தை வீணாக்காதீங்க, விஷாலை வைத்து முயற்சி பண்ணுங்க என்று சொன்னார்.

விஷால் குறித்து சொன்னது:

ஆனால், விஷாலுக்கு பிசினஸ் பண்றது தான் ஆர்வம் இருந்தது. பிசினஸ் விஷயமாக எங்கு போனாலும் எங்க போறீங்க டாடி, நானும் கூட வருவேன் என்று ஆர்வமாக கேட்பான். அவன் எப்படியாவது ஹீரோ ஆகிவிட வேண்டும் என்றும் ஒரு படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அவன், நோ டாடி என்று மறுத்து விட்டான். எங்க நிறுவனம் ஆறு வருஷமாக இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. அப்பா மாதிரியே பிசினஸில் பேர் எடுக்கணும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனால், அவனை நடிக்க வைக்கிறதுக்கு நான் கெஞ்சிக்கிட்டே இருப்பேன். நடி நடி என்று டார்ச்சர் பண்ண ஒரே அப்பா இந்த உலகத்தில் நீ தான் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

-விளம்பரம்-

விஷால் நடிப்பு பயணம்:

ஒரு கட்டத்தில் அவனுக்கே சினிமாவின் மீது ஆர்வம் வந்தது. அப்ப கூட நடிப்பு மேல ஆசை இல்லை. இயக்கத்தின் மேல தான் அவன் ஆசைப்பட்டான். அர்ஜுன் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரிடம் தான் உதவி இயக்குனராக இவன் ஒர்க் பண்ணினான். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து படம் நடிக்க ஒத்துக் கொண்டான். அந்தப் படம் தான் செல்லமே. அதற்கு பிறகு சண்டக்கோழி சூப்பர் ஹிட். மக்களவனை ஆக்சன் ஹீரோவாக தான் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் தொடர்ச்சியாக ஆக்ஷன் படத்திலேயே விஷால் நடிக்க ஆரம்பித்தான். விஷால் நல்ல பேமஸ் ஆனது சண்டக்கோழி படத்துக்கு பிறகு தான். அவன் பெரிய தொகை கேட்டான்.

சண்டக்கோழி படம் குறித்து சொன்னது:

அவ்வளவு கொடுக்க வேண்டாம் என்று சொன்னாங்க. ஆனால், நான் அவனை நம்பி கொடுத்தேன். அவன் அளவுக்கு மீறி கேட்க மாட்டான். அதையும் மீறி அவன் கேட்கிறான் என்றால் அதற்கு காரணம் இருக்கும் என்று நம்பி கொடுத்தேன். அந்த நம்பியை நம்பிக்கையை காப்பாற்றி விட்டான். படம் பெரிய வெற்றி. எத்தனை யோ ஹீரோயின்கள் விஷால் கூட நடித்திருக்கிறார்கள். எனக்கு பெஸ்ட் பேர் என்று பார்த்தால் கீர்த்தி சுரேஷ் தான். சண்டக்கோழியில் வர அப்பா மகன் மாதிரி தான் ரியல் லைப்பில் நானும் அவனும் இருக்கிறோம். நான் என்ன பண்ணுகிறேனோ அதை தான் இயக்குனரும் படமாக எடுத்திருந்தார். அவனோட படங்களில் எனக்கு ரொம்பவே பிடித்த படம் சண்டக்கோழி தான். அந்தப் படத்தை தெலுங்கிலும் டப்பிங் பண்ணினோம். அங்கேயும் சண்டக்கோழி படம் பெரிய ஹிட். அதனால் சண்டக்கோழி எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான் என்று சந்தோசமாக கூறியிருந்தார்.

Advertisement