விஷால் திருமணம் உண்மையில் நின்றதா ? விஷால் பிறந்தநாளன்று அவரது காதலி பதிவிட்ட புகைப்படம்.!

0
12436
vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is D1xVUPHUwAA1pG9.jpg

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தமும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இதையும் பாருங்க : நான்கு பேர் காதல்.! இறுதியில் சாண்டியும் கவினை கலாய்க்க ஆரம்பிச்சிட்டாரே.! 

- Advertisement -

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

Gotta love gradients.

A post shared by Anisha Alla (@bluewatermelon17) on

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்றி விஷாலின் பிறந்தநாளுக்கு கூட அனிஷா எந்த ஒரு வாழ்த்துக்களையும் சமூக வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. மேலும், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அனிஷா. அந்த புகைப்படத்தை கண்ட பலரும் விஷாலுடன் உங்களின் திருமணம் நின்றுவிட்டதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு அனிஷா எந்த பதிலையும் அளிக்கவில்லை.

Advertisement