பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உடைய 75 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருந்தார்கள். இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர் விஷாலும் கலந்து கொண்டிருந்தார்.

பின் இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அதில் அவர், தமிழ்நாட்டில் இருக்கும் ஜிஎஸ்டி வரி பிரச்சனையை பிரதமர் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் மட்டும் தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஒரே வரி ஒரே நாடு என்று நீங்கள் சொன்னதை நம்பினேன். ஆனால், ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாருமே இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
விஷால் அளித்த பேட்டி:
இது திரைத்துறையை ரொம்ப பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக இருக்கிறது. திரைத்துறை ரொம்ப அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால், இந்த ஆண்டு திரைத்துறைக்கு மோசமான ஆண்டாக மாறியிருக்கிறது. யாரும் இதை பற்றி வெளியிலேயே பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு விஷால் கோரிக்கை:
நாங்கள் யாரும் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை. அனைவரும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். தற்போது விஷாலின் இந்த கோரிக்கை தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
விஷால் திரைப்பயணம்:
இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் 'செல்லமே'. அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

விஷால் குறித்த தகவல்:
மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால் நடித்த 'ரத்தினம்' படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.






