“அவன் வந்தா ஆப்ஷன் இல்ல, ஆக்சன் தான்”- விஷாலின் ஆக்ஷன் பட விமர்சனம்.

0
12494
action
- Advertisement -

ஆம்பள படத்தை தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘ஆக்ஷன்’. மேலும், இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் இன்று (நவம்பர் 15) தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘ஆக்ஷன்’. மேலும்,இந்த படத்தில் தமன்னா, அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங்,யோகி பாபு, ஷா ரா, ஜார்ஜ் மரியான், ஆனந்தராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாராகியுள்ள படம் ஆகும். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்தரன் தயாரித்து உள்ளார். ஹாலிவுட்டில் உருவாகும் ஆக்சன் பாணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் விஷாலும்,தமன்னாவும் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார்கள். மேலும், ஆக்ஷன் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் நிறைந்து இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for action movie vishal"

கதைக்களம்:

- Advertisement -

“அவன் வந்தா ஆப்ஷன் இல்ல, ஆக்சன் தான்”; “உண்மையை தேடி ஆயிரம் கிலோமீட்டர் வந்தவன். உன்னை தேடி அரை கிலோமீட்டர் வர மாட்டானா” என்ற டயலாக் மூலம் கதை தொடங்குகிறது. இந்த படத்தில் விஷால் அவர்கள் ராணுவ அதிகாரியாக நடித்து இருக்கிறார். சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். மேலும்,விஷாலின் அப்பா முதலமைச்சர் ஆவார். உலகில் தீவிரவாத இயக்கங்கள் இஸ்தான்புல், லண்டன், லாகூர் ஆகிய இடங்களில் உருவாகிறது. மேலும்,இந்த தீவிரவாத கும்பலில் இருந்து ஒரு குழு மட்டும் இந்திய நாட்டை தாக்குவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறது. பின் விஷாலுக்காக நிச்சயம் செய்வதற்காக வீட்டில் பார்க்கப்படும் பெண் தான் ஐஸ்வர்யா.

இதையும் பாருங்க : தங்கைக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்திய அஜித். அறிய புகைப்படம் இதோ.

இவர் தீவிரவாத கும்பலின் தாக்குதலினால் விஷாலுக்கு நிச்சயம் செய்த பெண் மற்றும் விஷாலின் அண்ணன் இறந்து விடுகிறார்கள். இதனால் அந்த கும்பலை கண்டுபிடித்து பழி வாங்குவதற்காக விஷால் கிளம்புகிறார். அப்ப தான் ஆக்ஷன் தொடங்குகிறது. விஷாலுக்கு உதவி செய்வதற்காக ராணுவ பயிற்சியில் இருந்த தமன்னா வருகிறார். அந்த தீவிரவாத கும்பலை பழி வாங்குவதற்காக “சுபாஷ் மிஷன் ” என்ற அமைப்பை உருவாக்கி ஏமோஷனல், தேச பக்தி கலந்த கமர்சியல் படமாக உள்ளது. பின் இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த தீவிரவாத இயக்கத்தை அழிக்கிறார்களா? இல்லையா? என்பது தான் கதையின் சுவாரசியமே. இந்த படம் ஏற்கனவே பாலிவுட் படமான ‘வார்’ கதையின் தழுவல் மாதிரி உள்ளது. இந்த வார் படம் பாலிவுட்டில் சூப்பராக போய் கொண்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்த ஆக்ஷன் படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் க்ரைம்,திரில்லர் கதையாக அமைந்து உள்ளது. மேலும், ஹாலிவுட் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் தைரியமாகவும், கிளாமராகவும் இருக்கின்ற மாதிரி ஆக்ஷன் படத்திலும் நடிகை தமன்னா உடைய கதாபாத்திரமும் உள்ளது. மேலும், சுந்தர் சி பல கமர்சியல் படங்களை கொடுத்தாலும் இந்த படத்தை பாலிவுட் பாணியில் கொண்டு போக பல முயற்சிகளைச் செய்து உள்ளார். விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்திற்கு போட்டியாக ஆக்ஷன் படம் அமையுமா?

பிளஸ்:

இந்த ஆக்ஷன் படம் தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி சண்டை,காமெடி என அனைத்து விஷயங்களையும் கொண்ட கதையாக உள்ளது.

உண்மையான ஆக்ஷன்னா விஷாலின் ஆக்ஷன் படம் தான்.

பெண்களுக்கு வலுவூட்டும் கதாபாத்திரம் கொண்ட கதையாக உள்ளது.

ஹாலிவுட் படத்தையே மிஞ்சி விட்டது ஆக்ஷன் படம்.

இந்த படத்தில் நல்ல பல இடங்களை பார்க்க முடிந்தது.

Image result for action movie vishal"

மைனஸ்:

ஆக்ஷன் படத்தின் ரோமன்ஸ் கொஞ்சம் ஹாலிவுட் பாணியில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஹாலிவுட் ரேஞ் என்பதால் படத்தில் தமன்னா போடும் ஆடைகள் அந்த அளவிற்கு மோசமாக இருந்திருக்க வேண்டாம்.

மேலும், படத்தின் எடிட்டிங்கில் மிகவும் சொதப்பல் தன்மை தெரிகிறது. படத்தின் பாடல்களும் மனதில் பதியும்படி இல்லை.

படம் அலசல்:

ஆக்ஷன் படம் முழுவதும் பில்டப்பாகவே இருந்தது என்று கூட சொல்லலாம். மேலும்,இயக்குனர் சுந்தர்.சி நினைத்தது போல ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. பின்னர் ஆக்ஷன் படம் வழக்கம் போல கமர்சியல் படமாக அமைந்தது. எப்போதுமே தமிழ் சினிமா கதையில் குடும்ப பாசம், தேசபக்தி, துரோகம், பலி வாங்கும் எண்ணம் என வழக்கமான கதை அம்சமாகவே இந்த படமும் உள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படத்தில் பெரிய சுவாரசியமான காட்சிகள் இல்லை. படத்தை ஒரு முறை பார்க்கலாம். மொத்தத்தில் ஆக்சன் படம் ‘பில்டப் ஆக்சன்’.

Advertisement