இந்த மருந்தை தான் எடுத்துக்கொண்டேன் – கொரோனாவில் இருந்து மீண்ட சீக்ரெட் சொன்ன விஷால்.

0
2442
vishal
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 25) மாலை முதல் விஷாலுக்கு, அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டு முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

- Advertisement -

மேலும், இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் இருந்தது. என் மேலாளருக்கும் அப்படியே.நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டோம். ஒரே வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியே வந்தோம்.

தற்போது நாங்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் உள்ளோம் என்று பதிவிட்டிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் விஷால். அதில், ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டோம். அதன் மூலம் 4 நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது. 7 நாட்களில் முழுமையாகக் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன். இதை ஆயுர்வேத மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. எங்களை என்ன விஷயம் காப்பாற்றியது என்று சொல்வதற்காகவே இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement