இதுகுறித்து பேசியுள்ள நடிகர் விஷால், இந்த படம் முழுக்க முழுக்க மிருகங்களை மையமாக வைத்து தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.நான் நீண்ட நாட்களாக இந்த கதையை சிந்தித்து வந்தேன் தற்போது தான் முழு கதையை முடித்துள்ளேன். படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய விஷால், இந்த படத்தில் விலங்குகள் தான் முக்கிய பங்கு வகிக்கும், குறிப்பாக தெரு நாய்கள் தான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறது.அதே போல ஒரு முக்கிய கதாநாயகியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.




