தெலுங்கு சினிமாவை பொறுத்த வரையில் சில குடும்பங்கள் தான் ஆட்சி செய்கின்றது என்று சொல்லலாம். அதிலும் வாரிசு நடிகர்கள் அதிகம் தெலுங்கு சினிமாவில் உள்ளது. அதில் முக்கியமானது நாகார்ஜுனா குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், மகேஷ்பாபு குடும்பம், மோகன்பாபு குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம். இதில் மோகன் பாபுவின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் நடிகர் விஷ்ணு மஞ்சு. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மஞ்சு விஷ்ணு மஞ்சு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனரும் ஆவார்.
இவரது பெயரில் வெளிவந்த விஷ்ணு என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மேலும், இவர் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் என்ற போட்டியில் தெலுங்கு திரையுலகத்திற்கு ஆதரவானவர். சமீபத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சு போட்டி இட்டிருந்தார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் காரசாரமான தேர்தல் பிரச்சாரம் நடந்தது.
நடிகர் சங்கம் தலைவரான மஞ்சு விஷ்ணு :
மேலும், இந்த இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு செய்த தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த வீடியோக்கள் செய்த சோசியல் மீடியாவில் சுடச்சுட விவாதங்களாக வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பிரகாஷ்ராஜ் அணி விஷ்ணுவை தாக்கியும் விஷ்ணு மஞ்சு அணி பிரகாஷ்ராஜ் தாக்கியும் கடுமையாகப் பேசி இருந்தார்கள். பின் இறுதியில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி விஷ்ணு மஞ்சு தேர்தலில் வெற்றி வாகை சூடினார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் மோகன் பாபு நடித்த சன் ஆப் இந்தியா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
மஞ்சு விஷ்ணுவின் ஆவேச பதிவு:
அந்த படத்தை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்தும், மீடியாவில் போட்டும் கலாய்த்து இருந்தார்கள். இதனால் கடுப்பான விஷ்ணு மஞ்சு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ரசிக்கக்கூடிய மீம்ஸ்களை நாங்களும் ஜாலியாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.இனி மேல் எங்கள் குடும்பத்தைக் குறித்து யாராவது மீம்ஸ் போட்டால் அவர்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.
மஞ்சு விஷ்ணு வீட்டில் திருட்டு:
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்கள் தான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார். இப்படி விஷ்ணு மஞ்சு சாட்டிய குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் மஞ்சு விஷ்ணு ஜூப்லி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மஞ்சு விஷ்ணு வீட்டில் இருந்த விலையுயர்ந்த மேக்கப் கிட் காணாமல் போய்விட்டது. அதன் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும்.
புகார் அடிப்படையில் போலீஸ் விசாரணை:
முதலில் அதை நடிகர் சங்கம் MAA அலுவலகத்திலிருந்து திருட்டு போனது என மீடியாவில் செய்தி வெளியானது. ஆனால், போலீஸில் அளித்துள்ள புகாரில் திருட்டு நடந்தது வீட்டில் என விளக்கம் அளித்திருக்கின்றனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் திருட்டு நடந்த நாளிலிருந்து ஹேர் ட்ரெஸ்ஸர் நாக ஸ்ரீனு என்பவர் தலைமறைவாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து போலீஸ் எதையும் உறுதிப்படுத்தவில்லை.