விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 93 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் 8:
இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கில் சௌந்தர்யா, தன்னுடைய காதலை வெளிப்படையாக விஷ்ணுவிடம் சொன்னார். அவருமே சம்மதம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷ்ணு, எனக்கு நட்பு ரீதியாக தான் சௌந்தர்யா அறிமுகம் கிடைத்தது. நானும் ரொம்ப முயற்சி பண்ணி தான் அந்த நிகழ்ச்சிக்கு போனேன். அவங்களும் அப்படித்தான் போயிருக்காங்க. அவர்களுக்கு என்னை பிடிக்கும் என்று இரண்டு பேரையும் தெரிந்த சில பிரண்ட்ஸ்கள் மூலமாக கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குமே அவர்களை பிடிக்கும்.

விஷ்ணு பேட்டி:
முதலில் ப்ரபோஸ் செய்தால் ஏதாவது நெகட்டிவாக சொல்லிடுவாங்க என்று தான் நான் அமைதியாக இருந்தேன். அன்னைக்கு நான் அவர்களுடைய பிரண்டாக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் போனேன். அதற்கு பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. வெளியில் சிலர், இதெல்லாம் ஸ்கிரிப்ட், டி.ஆர்.பிக்காக எதையாச்சும் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனால், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீர்களான்னு ஒரு பொண்ணு ஊரறிய கேட்பதை அப்படி எடுத்துக்க கூடாது. நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். இப்பதான் முறைப்படி சொல்லி இருக்கிறோம். அதனால் கொஞ்ச நாள் லவ்வர்ஸாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கவும்.

சௌந்தர்யா பற்றி சொன்னது:
மேக்ஸிமம் இந்த வருடத்திற்குள் கல்யாணம் செய்து கொள்வோம். பிக் பாஸ் எனக்கு போன வருஷம் டைட்டில் தரவில்லை. ஆனால், இந்த வருஷம் அழகான வாழ்க்கையை தந்திருக்கிறது என்றுதான் சொல்லுவேன். தமிழ் பிக் பாஸ் மூலம் ரியல் லைப்பில் சேர்ந்த முதல் ஜோடி என்றால் அது நாங்கள் தான். ரொம்ப முயற்சி செய்தன் மூலம் தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எந்த பர்பாமன்ஸும் பண்ணாமல் 90 நாட்களை யாராலும் கடந்து விட முடியாது. என் லவ்வர் என்பதற்காக நான் சொல்லவில்லை. இதே நிகழ்ச்சியில் நானுமே 100 நாள் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காக நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தான் இறுதி வரை இருக்க முடியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னது:
நான் பிக் பாஸ் ரசிகர்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் சோசியல் மீடியா பார்த்து ஓட்டு போடாதீங்க. சேனலில் தினமும் ஒளிபரப்பாகிற ஒரு மணி நேர எபிசோடு, 24 மணி நேர லைவ் பார்த்து அதன் மூலம் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யாரோ அவர்களுக்கு ஓட்டு போடுங்க. சௌந்தர்யாவுக்கு வெளியில் பெரிய அளவு பி ஆர் ஒர்க் நடக்குது என்றெல்லாம் ஒரு குற்றச்சாட்டை சக போட்டியாளர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த ஷோவுக்குப் போகிற எல்லா போட்டியாளர்களுக்குமே தெரிஞ்சவங்க தான் பிரண்ட்ஸ். அவர்கள் சப்போர்ட் பண்ணனும்னு கேட்டுட்டு தான் போறாங்க. இதை பி.ஆர் ஒர்க்குன்னு சொல்ல முடியுமா? சௌந்தர்யா டைட்டிலுக்கு தகுதியானவர் என்று நான் சொல்வேன் என்று கூறி இருக்கிறார்.






