தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஆரியன். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் கே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை எல்லாம் பேட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் திடீரென இவருடைய நிகழ்ச்சிக்குள் செல்வராகவன் நுழைகிறார். இவர் அங்குள்ள பிரபல நடிகரை துப்பாக்கியால் காலில் சூடுகிறார். அந்த நிகழ்ச்சியை மொத்த பேருமே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதை பார்த்து பலர் உரைந்து போய்விடுகிறார்கள். பின் தான் ஒரு எழுத்தாளர் என்றும் தன்னுடைய படைப்புக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு கிடைக்கவில்லை என்றெல்லாம் செல்வராகவன் சொல்கிறார். அதோடு இனிவரும் அடுத்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு கொலைகள் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார். பின் செல்வராகவன் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்து விடுகிறார். இந்த கேசை விசாரிக்க தான் ஹீரோ விஷ்ணு விஷால் வருகிறார்.

செல்வராகவன் சொன்னது போலவே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொலை நடக்கிறது. அவர் சொன்ன பெயரில் அந்த நபர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது? இறந்து போன ஒருவரால் எப்படி தொடர்ந்து கொலைகளை செய்ய முடியும்? எதற்காக அவர் இதை செய்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? இதையெல்லாம் விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.
இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைகளம் அதை வித்தியாசமாக கொடுத்திருக்க எடுத்த முயற்சியும் நன்றாக இருக்கிறது. பொதுவாகவே சீரியல் கில்லர் க்ரைம் படம் என்றாலே கொலையாளி யார்? என்று தான் தேடுவார்கள். ஆனால், இந்த படத்தில் கொலையாளி செல்வராகவன் தான். ஆனால், அவர் இறந்த பிறகும் தொடர் கொலைகள் நடக்கிறது. எப்படி நடக்கிறது? யார் செய்கிறார்கள்? என்பதை தான் இயக்குனர் சுவாரசியத்துடன் காட்டிருக்கிறார்.
இருந்தாலும் சில இடங்களில் அடுத்து என்ன என்று பார்வையாளர்கள் யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. படத்தினுடைய கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் ஏற்கத்தக்கதாக இல்லை. படத்தில் வரும் காதல் காட்சிகள், விவாகரத்து காட்சிகள் எல்லாம் தேவையற்றதாகவே இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் உடைய நடிப்பு அற்புதமாக இருக்கிறது. இவரை அடுத்து ஹீரோயினியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பும் சிறப்பு.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தினுடைய பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. வித்தியாசமான கதை இன்னும் கொஞ்சம் சர்ப்ரைஸ், விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
விஷ்ணு விஷால், செல்வராகவன் நடிப்பு அருமை
கதைக்களம் நன்றாக இருக்கிறது
முதல் பாதி அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது
குறை:
சில கதாபாத்திரங்களை கனெக்ட் செய்ய முடியவில்லை
சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது.
கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருக்கலாம்
மொத்தத்தில் ஆரியன் - நல்ல முயற்சி






