முதன் முறையாக தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால்.!

0
1619
Vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது. விஷ்ணுவுடன் ராட்சசன் படத்தில் நடித்தப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது அந்த நெருக்கம் திருமணம் வரை சென்றுள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவியது.

இதையும் படியுங்க : இந்தி படிக்க சொன்ன காயத்ரி.! பங்கமாக கலாய்த்த காஜல்.! செருப்படி பதில்.! 

- Advertisement -

ஆனால், இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இந்த நிலையில் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் செல்பி புகைப்படம்எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இது யார் எனக் கேள்வி கேட்டு வந்தனர்.

vishnu vishal

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணு விஷால், நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி வருகிறோம். எங்களுக்கு பொதுவான நண்பர்களும் பலர் இருக்கின்றனர். அவர்கள் உடன் அதிக நேரம் செலவிடுவோம். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. மற்ற விஷயம் (காதல்) பற்றி பேச இது சரியான நேரம் இல்லை. இருவருக்கும் தொழில் ரீதியான பொறுப்புகள் பல உள்ளது” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

-விளம்பரம்-

Advertisement