6 பேக்ஸ் வச்சிருக்கவன் குடிக்க மாட்டான் – குடி போதையில் தகராறு செய்ததாக புகாருக்கு விஷ்ணு விஷால் விளக்கம்.

0
1251
vishnu

குடி போதையில் தகராறு செய்ததாக தன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக குடியிருப்பின் செக்ரடரி, காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 021 ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலையில் சத்தமான இசையைக் கேட்டதாகவும், இதனால் அக்கம் பக்கத்தினர் துக்கத்தில் இருந்து விழித்துள்னர்.நீண்ட நேரம் கதவை தட்டியும் விஷ்ணு விஷாலின் பிலாட் தீர்க்கப்படாததால், அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் 100க்கு அழைத்துள்ளனர்.

பின்னர் அங்கே இரண்டு காவலர்கள் வந்த பின்னர் குடியிருப்பு வாசிகள் அவர்களுடன் சென்று விஷ்ணு விஷாலுடன் கேட்ட போது அவர் குடித்து இருந்ததாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், விஷ்ணு விஷால் அடிக்கடி இப்படி சத்தமாக பாட்டு போட்டும், அடிக்கடி தனது நண்பர்களை அழைத்து வந்தும் கூத்தடிப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய அப்பா ஒரு ஒய்வு பெற்ற அதிகாரி அதனால் எப்படி என் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று போலீசாரிடம் விஷ்ணு விஷால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிடபட்டுள்ளதாம் கூறப்பட்டது.

- Advertisement -

அதே போக குடியிருப்பு பகுதியில் இருந்த CCTV கேமராவில் சம்பவத்தன்று நடந்தவை பதிவாகியும் இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தினமும் குடித்தால் சிக்ஸ் பேக் உடனடியாக வந்து விடாது. நீங்கள் கடுமையான உணவு கடுப்பாட்டில் இருப்பதோடு நீண்ட காலம் மதுவையும் விட வேண்டும். ஒரு சில இந்த லாஜிக்கை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ள விஷ்ணு விஷால், அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு டயட்டில் இருந்து வருகிறேன். டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? என்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய தொழிலதிபர் குடும்பத்தினர் இதுபோன்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள். நான் ஒரு சினிமாக்காரன் என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன்னை இந்த குடியிருப்பை விட்டு காலி செய்வதற்காக மட்டுமே அவர்கள் இதுபோன்ற புகார் அளித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement