விவாகரத்திற்கான காரணத்தை முதன் முறையாக கூறிய விஷ்ணு விஷால்.!

0
1082
Vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு தனி இடம் உண்டு. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த செய்தியை கேட்டு பலரும் அதிர்ந்து போகினர். இதற்கிடையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பாலை காதலிப்பவதாகவும் விரைவில் திருமணம் செய்யபோவதாகவும் கிசுகிசுக்கபட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்து பேசியிருந்தார் விஷ்ணு விஷால்.

- Advertisement -

திருமணத்திற்கு முன்பு நான் யாரிடமும் நிறைய பேச மாட்டேன் அது என் கேரியருக்கு தடையாக இருப்பதாக கருதினேன். அதனால் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன்.

அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

-விளம்பரம்-

ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன் என்று மனமுருக பேசியுள்ளார்

Advertisement