‘போலீஸ் போலீஸ் விளையாடிய போது’ சிறு வயதில் தனது தந்தையுடன் போலீஸ் உடையில் இருக்கும் விஷ்ணு விஷால். அப்படியே Xerox.

0
5936
vishnuvishal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் எம்.பி.ஏ முடித்து உள்ளார். பின் இவர் TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது விஷ்ணுவின் ஒரு காலில் காயம் ஏற்ப்பட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது. அதற்கு பின் தான் இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் அவர்கள் ரெஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார்.

இதையும் பாருங்க : ‘பிசாசு’ படத்துக்கு முன்பே கெளதம் மேனன் படத்தில் நடித்துள்ள ‘சைக்கோ’ பட வில்லன். எந்த படத்தில் தெரியுமா?

- Advertisement -

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் வேற யாரும் இல்லைங்க. நடிகர் விஷ்ணு விஷால் உடைய அப்பா தான். போலீஸ் உடையுடன் இருக்கும் தன் தந்தையுடன் தானும் போலீஸ் உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

-விளம்பரம்-
Advertisement