சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.2014-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘பிசாசு’. இந்த படத்தினை பிரபல இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகா நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் நடித்திருந்தார். மேலும், ராதாரவி, அஸ்வத், கல்யாணி நடராஜன், ஹரிஷ் உத்தமன், வினோதினி வைத்யநாதன் ஆகியோர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி. இவர் ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி மிஷ்கின் இயக்கிய மற்றுமொரு படத்திலும் நடித்தார்.
இதையும் பாருங்க : லாக் டவுன் சமயத்தில் மாடியில் டூ பீஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்திய துல்கர் பட நடிகை.
ஆனால், இந்த முறை அவருக்கு ஜாக்பாட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் வெளி வந்த திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இந்த படத்தில் கதையின் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம் புலி, ரேணுகா, ஆடுகளம் நரேன், ஷாஜி சென், பவா செல்லத்துரை, ஜி.ஆர். ஆதித்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் பவர்ஃபுல்லான சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் பிச்சுமணி நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி ‘பிசாசு’ படத்துக்கு முன்பே ஒரு படத்தில் நடித்திருந்ததாக தகவல் வெளி வந்திருக்கிறது. 2012-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நீதானே என் பொன் வசந்தம்’.
இதையும் பாருங்க : ஆதவன் படத்தில் வந்த இந்த காட்சியில் கயிறுல செஞ்ச தவற கவனீசீங்களா. இதான் அது.
இந்த படத்தினை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி ஜீவாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இப்போது அவர் படத்தில் வந்த காட்சியின் புகைப்படம் வெளி வந்திருக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.