ஒரு பொண்ண தோற்கடிக்க முடியலன்னா இப்படி பண்றது, fake love – சம்யுதாவின் பதிவு சொல்வது என்ன ?

0
859
samyuktha
- Advertisement -

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பிரிந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் இதற்கு முன்பே பல தொடர்களில் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான தொடரிலும் இவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ரஜினி, கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்.அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார்.

- Advertisement -

இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். மேலும், விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதிலளித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘கள்ளத் தொடர்புகள் உண்மையான காதலை பொய்யான காதலாக மாற்றிவிடுகிறது. இதற்கு மேலும் அமைதியாக இறுக்கப்போவது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.’

விஷ்ணுகாந்தின் இந்த புதிவை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சம்யுக்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில்”ஒரு பெண்ணைத் தோற்கடிக்க முடியாது என்று தெரிந்ததும், அவளது நடத்தை குறித்த விமர்சனத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்” எனக் குறிபிட்டு ‘ஃபேக் லவ்’ என்கிற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருக்கிறார். மேலும், ‘Peace over drama & distance over disrespect’ என்கிற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஸ்டோரி ஒன்றில் ‘மை டியர் ஹேட்டர்ஸ்… நீங்கள் நினைத்தது நடந்ததாக அனைவரும் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நல்லது. என் வாழ்க்கை இனிமேல்தான் தொடங்கப் போகிறது. நீங்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதது இனிமேல் நடக்கப் போகிறது. அதனால், பெரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள வலிமை வேண்டும் என பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். குட் லக்!” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement