அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது இந்த படத்தின் டிரைலரை தான்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்க : இதுவரை அஜித் படத்திற்கு கிடைக்காத பெருமை..!விஸ்வாசம் முதல் முறையாக இந்த நாடுகளில்..!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் தொடங்கபட்ட பேட்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என்று அனைத்தும் இந்த படத்திற்கு முன்பாகவே வெளியாகிவிட்டது.
இந்நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் கொல மாஸாக இருக்கும் என்று படத்தொகுப்பாளர் ரூபன் தனது ட்வுட்டரில் பகிர்ந்துள்ளார்.