வெற்றிகாரமான 50வது நாளை நோக்கி விஸ்வாசம்.! தமிழகத்தில் எத்தனை திரையரங்கில் தெரியுமா.!

0
370

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து  வருகிறது. இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.   

விஸ்வாசம் படம் 6 வது வாரம் நெருங்கிய போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்த படம் 150 திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி குறித்து படத்தின் விநியோகிஸ்தர் பேட்டி அளித்தார்.

அதில் அவர், விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்தும் , ஹிட் குறித்தும் எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே பதில்தான். தமிழ்சினிமாவின் ஒரே மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம்தான் என்று ஆணித்தனமாக சொல்கிறார்.

இந்த படம் 50 வது நாளை நெருங்கும் இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படம் எத்தனை திரையரங்குகளில் 50 வது நாளை நெருங்க இருக்கிறது என்ற அதிதிகாரபூர்வ அறிவிப்பை சத்ய ஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 125 திரையரங்குகளில் 50வது நாளை நெருங்கியுள்ளதாம்.