விஸ்வாசம் படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம்.! 50வது நாளில் மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா.!

0
895
Viswasam-50th-day

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து வருகிறது, இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.    

ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளிவந்த இந்த படம் தமிழக்தில் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. மேலும், படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.

- Advertisement -

மேலும், தற்போது வரை இந்த படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படம் நேற்று (பிப்ரவரி 28) 50வது நாளை நெருங்கியது.

50 வது நாளை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் இந்த 125 திரையரங்குகளில் திரியிடப்பட்டது. 50வது நாளின் போதும் திரையரங்கம் முழக்க ஹவுஸ் புல் ஆனது. மேலும், 50 வது நாளில் மட்டும் 1 கோடி ரூபாய்யை இப்படம் வசூல் செய்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement