சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்கள் பெரிதும் எதிர்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஒட்டு மொத்த வசூலில் வேண்டுமானால் பேட்ட படம் அதிக வசூலை செய்திருந்தலும் வாரங்கள் செல்ல செல்ல பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் நிலையான வசூலை செய்து வருகிறது. சொல்ல போனால் ஒரு சில திரையரங்குகளில் பேட்ட படம் நீக்கப்பட்டு விஸ்வாசம் படத்தை திரையிட்டுள்ளனர்.
இதையும் படியுங்க : ரஜினி Vs அஜித், விஜய் Vs அஜித்.! யாரு மாஸ்.! சென்னையின் பிரபல திரையரங்கம் ட்வீட்.!
Read more at: https://tamil.behindtalkies.com/rajini-vijay-ajith-movie-combo-hits/
அதே போல வெளிநாடுகளில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் குறைவான நாடுகளில் தான் இருந்தது.அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் தான் அதிக வசூலை செய்துள்ளது.
அங்கு மூன்றாவது வார முடிவில் பேட்ட படம் இதுவரை 2.84 கோடியும் விஸ்வாசம் 87. 57 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், மூன்றாவது வாரத்தில் மட்டும் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.