கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படமும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
ஒரரே நேரத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை ஈன்று தந்தது.
இதையும் படியுங்க : விஸ்வாசம் படத்தின் வெற்றி.! மீண்டும் சத்யா ஜோதியுடன் தல.!இயக்குனர் யார் தெரியுமா?
சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளிலும்,மல்டி பிளக்ஸ் திரையரங்கிலும் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களையும் திரையிட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் ரஜினி,விஜய், அஜித் ஆகிய மூவரின் படங்களையும் ஒப்பிட்டு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அதில், எங்களுடைய திரையரங்கில் கடந்த 2014 பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் ஆகிய படங்களுக்கு வந்த மக்கள் கூட்டம், வசூல் சாதனையை தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் முறியடித்துள்ளது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.