விஸ்வாசம் படத்தில் தல ஹேர் ஸ்டைல் மட்டுமல்ல ! இதுவும் மாறிடிச்சி – கசிந்த தகவல்

0
1773
viswasam
- Advertisement -

அஜித் – சிவா கூட்டணி 4வது முறையாக இணையவுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் சூட்டிங் வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. இதில், முன்னர் நடித்த படங்களைப் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் தலைக்கு கலரிங் செய்து நடிக்கவுள்ளார் தல.
viswasam ajithஇதனால் படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. அப்படியாக, தலைக்கு வித்யாசமாக கலரிங் செய்திருந்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக சென்றது.

இந்த படத்தில் அஜித்திற்கு அந்த கெட்ட மாற்றம் மட்டுமில்லாது, தன் பேச்சு ஸ்டைலையே மாற்றப்போகிறார் போகிறார் தல. வடசென்னையை மையமாக வைத்து கதை உருவாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதன் காரணமாக தல அஜித் அழகாக சென்னை தமிழில் பேசவுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

அப்படி பார்த்தால் கண்டிப்பாக இந்த படத்தில் அஜித்தின் மேனரிசம் வித்யாசமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Advertisement