கசிந்தது விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் பெயர்..? செம கெத்தா இருக்கு..!

0
1620
Ajith
- Advertisement -

இயக்குனர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள “விஸ்வாசம் ” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

viswasam

- Advertisement -

இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் ஊர்ஜிதமாகி இருந்தது. ஏற்கனவே “விஸ்வாசம் ” படத்தின் கதை என்னவென்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் “விஸ்வாசம் ” படத்தின் கதை இது தான் என்று பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில் அந்த வார இதழில் வெளியான செய்தியில் , “விஸ்வாசம் ” படத்தில் நடிகர் அஜித், அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு அஜித் மும்பையிலும் மற்றுமொரு அஜித் மதுரையிலும் இருக்கின்றனர். அண்ணன் அஜித் மும்பையில் ரவுடிசம் செய்யும் தாதாவாக இருந்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

Thala

இந்நிலையில் இந்த படத்தில் மதுரையில் இருக்கும் தம்பி அஜித்தின் பெயர் தூக்குதுரை என்று சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாக வில்லை. ஆனால், இந்த பெயர் அஜித் ரசிகர்களுக்கு பிடித்து போக தற்போது இந்த பெயரை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Advertisement