உடல் எடை குறைந்து படு ஒல்லியாக மாறிய மெட்டி ஒலி சீரியல் நடிகை.

0
21777

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை காவேரி. இவர் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து போக்கிரி தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். நடிகை காவேரி சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒளி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

Image result for vaigasi poranthachi

- Advertisement -

அதனை தொடர்ந்து காவேரி, மீரா, தங்கம் மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். அதன் பிறகு இவர் 2013 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு சென்று விட்டார். அதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு காவேரி வந்து உள்ளார். இவரை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது நடிகை காவேரி அவர்கள் உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக உள்ளார்கள். அப்போதெல்லாம் நடிகை காவேரி அவர்கள் கொழு கொழு என்று குண்டாக இருந்தார். இப்போது உடல் மெலிந்து பார்க்கவே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். இவர் உடல் மெலிந்து போய் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் காவிரிக்கு என்ன ஆச்சி என்றும் இவ்வளவு வயதாகிவிட்டதா? என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க தன் உடல் எடை குறைந்ததை தொடர்ந்து பயந்து போய் நடிகை காவிரியே ஆஸ்பத்திரிக்கு போனாராம். அவரை சோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். இது குறித்து காவேரி கூறியது, தான் உடல் எடை குறைந்த பின்னர் முன்பை விட ஆரோக்கியமாகவும், சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக்காக காத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement